தமிழகத்தில் விளையாட்டுத்துறை சாதனை படைத்து வருகிறது- உதயநிதி ஸ்டாலின்

 
 “ஆளுநருக்கு எவ்வளவு கொழுப்பு? திமிரு?.. நீங்க வெறும் போஸ்ட் மேன்” - துணை முதல்வர் உதயநிதி காட்டம்.. 

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி விளையாட்டுத்துறை தமிழகத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்தியாவின் சூப்பர் கிளாசிக்கல் செஸ் போட்டி "சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024"-ன் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி, சிறப்புரை ஆற்றினார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற 7 சுற்றுகளில் மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவிலும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் பட்டம் வென்று அசத்தியுள்ளார். சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் 2024 மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு 15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மேலும் முதல்முறையாக நடத்தப்பட்ட சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்ற பிரணவிற்கு 6 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக‌ வழங்கப்பட்டது. குறிப்பாக பிரணவ் அடுத்த ஆண்டு நடைபெறும் சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்  மாஸ்டர் பிரிவில் நடைபெறும் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். மேலும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

உதயநிதி ஸ்டாலின்

நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரத்திற்கும், சாலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரனவ்-க்கு பாராட்டுக்கள். விளையாட்டு துறையில் முதலமைச்சர் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து விளையாட்டு வீரர்களுக்கு முழுமையான உதவிகளை மேம்படுத்தியுள்ளார். முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி விளையாட்டுத்துறை தமிழகத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தேசிய அளவைக் கடந்து சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷ் எலைட் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் 2780 புள்ளிகளைப் பெற்று அரவிந் சிதம்பரம் தனது கெரியரின் உச்சத்தை அடைந்துள்ளார். தமிழ்நாட்டில் மட்டும் 30 கிரான்ட் மாஸ்டர்ஸ் உருவாகியுள்ளனர். செஸ் போட்டியின் மீது ஆர்வம் கொண்டு இந்த போட்டிகளை நேரில் பார்க்க வந்த 3500 பார்வையாளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்தார்.