“நேற்று இயக்கத்தை ஆரம்பித்து இன்றைக்கே முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற ஆசை”- உதயநிதி ஸ்டாலின்
Dec 3, 2025, 13:39 IST1764749380744
கலைஞர் வழியில், தலைவர் வழியில் மூன்றாம் தலைமுறை பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்வதில் பெருமை அடைவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிறந்தநாள் விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “1979 ஆம் ஆண்டு, அப்போது எனக்கு 2 வயது. கலைஞரின் கோபாலபுரம் வீட்டின் முன்பு கலைஞர், நம்முடைய முதல்வர், முதல்வரின் கையில் குழந்தையாக நான் என மூன்று பேரும் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினோம். இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் அது. கலைஞர் வழியில், தலைவர் வழியில் மூன்றாம் தலைமுறை பெரியாரிஸ்ட் என சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். ஆனால் இப்போதோ நேற்று இயக்கத்தை ஆரம்பித்து இன்றைக்கே முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற ஆசையில் பலர் வருகின்றனர்” என்றார்.


