திமுகவை அழிப்பேன் என்று கிளம்பி உள்ளவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்- உதயநிதி ஸ்டாலின்

 
திமுகவை அழிப்பேன் என்று கிளம்பி உள்ளவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்- உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முரசொலி செல்வம் படத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து சுயமரியாதை திருமணம் நடத்தி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது திராவிட இயக்கம். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை நிலைநிறுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். திராவிட மாடல் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திமுக கூட்டணி வலுவாக உள்ளது. பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும். 2026 தேர்தலில் 2வது முறை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க நாம் உழைக்க வேண்டும்.

அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் எப்படியாவது திமுகவில் ஒரு விரிசல் விழுந்து விடாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள். திமுகவை அழிப்பேன் என்று பல பேர் கிளம்பி இருக்கிறார்கள், அவர்களுக்கு நான் பதில் சொல்ல தேவை இல்லை.  அவர்களுக்கெல்லாம் மக்கள் பதில் சொல்வார்கள். நம்முடைய தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.