சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெறுக- உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையேற்றத்தை  ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது..!


அக்டோபர் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 203 ரூபாய் அதிகரித்து ஒரு சிலிண்டர் 1898 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திடீர் விலை உயர்வு உணவகங்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.203 கூடுதலாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள் - தேநீர் கடைகள் வைத்திருப்போர் என சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும். 

சனாதன சர்ச்சைப் பேச்சு | தமிழக அரசு, உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உச்ச  நீதிமன்றம் நோட்டீஸ் | Sanatana issue Supreme Court notice to TN govt, Udhayanidhi  Stalin to respond ...

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும் - முறைபடுத்தப்படாத GST - பணமதிப்பு நீக்கம் - கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளாலும் நொடிந்திருந்த சிறு வணிகர்கள் மீது மேலும் ஒரு தாக்குதலாக இந்த  விலையேற்றம் அமைந்துள்ளது. இந்த விலையேற்றத்தை  ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.