‘ஓரவஞ்சனை தொடர்ந்தால் தமிழ்நாடு மீண்டும் தண்டிப்பது உறுதி’- பாஜகவுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உழைத்து களைத்த மக்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை நிறுத்துவது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கிராமப்புற பொருளாதாரத்திற்கும் - சாமானிய மக்களின் வாழ்வாதாரத்திற்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் முதுகெலும்பாக இருந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளதை ஒரு போதும் ஏற்க முடியாது. 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உழைத்து களைத்த மக்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை நிறுத்துவது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி.
கிராமப்புற பொருளாதாரத்திற்கும் - சாமானிய மக்களின் வாழ்வாதாரத்திற்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் முதுகெலும்பாக இருந்து வருகிறது.
— Udhay (@Udhaystalin) March 29, 2025
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளதை ஒரு போதும் ஏற்க முடியாது.
100 நாள்…

இதனை கண்டித்து தமிழ்நாடெங்கும் கழகம் நடத்துகிற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போர்க்குரல் டெல்லியின் செவிகளில் விழட்டும். பாசிஸ்ட்டுகளின் இந்த ஓரவஞ்சனை தொடர்ந்தால், தமிழ்நாடு அவர்களை மீண்டும் தண்டிப்பது உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.