அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய உதயநிதி..

 
உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞர் அணி செயலாளரும்,  சேப்பாக்கம்  தொகுதி எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 44வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மழை வெள்ள பாதிப்புகள் இருப்பதால் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கி , உதயநிதி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் நேற்று முதலே, அமைச்சர்கள் பலரும் முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன் ஆஜராகி உதயநிதிக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

1

இந்நிலையில் இன்று தனது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.  அதனை தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்திற்கு சென்ற அவர், கலைஞரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

2

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”சமூகநீதி அரசியலின் கலங்கரை விளக்கமாம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் என் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மலர் தூவி மரியாதை செய்தேன். கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிட கழகத்தினரைக் கேட்டுக்கொண்டேன். அன்பும் நன்றியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.