சென்னை தீவுத்திடலில் நீருக்கடியில் மீன் கண்காட்சி

 
UNDER WATER WORLD UNDER WATER WORLD

சென்னை தீவுத்திடலில் நீருக்கடியில் வண்ண மீன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

தொடர் விடுமுறை காரணமாகவும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நீருக்கடியில் மீன் கண்காட்சியை பார்க்க பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை தந்து பார்வையிடுகின்றனர். இதற்கு நுழைவு கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று 12 மணி முதல் இரவு 10மணி வரை நீருக்கடியில் மீன் கண்காட்சிக்கு அனுமதியளிக்கப்படுகிறது. 

இந்த Under world மீன் கண்காட்சி கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய நிலையில், அக்டோபர் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. குழந்தைகளையும், சிறுவர்களையும் கவர்வதற்காக 90 வகையான  வண்ண மீன்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. ஆழ்கடலில் இருக்கும் அரியவகை மீன்களும், பெரிய ரக மீன்களும் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

இதன் அருகில் சிறிய கண்ணாடி பெட்டிகளில் பல்வேறு வண்ண மீன்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு நீருக்கடியில் மீன் கண்காட்சியை தொடர்ந்து, ஸ்னோபால் விளையாட்டு, உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள், சிறுவர்கள், குழந்தைகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.