ஈரோட்டில் நடைபெற உள்ள தவெக பொதுக்கூட்டத்திற்கு எதிர்பாராத சிக்கல்..! சோகத்தில் விஜய் ரசிகர்கள்..!

 
1 1

ஈரோட்டில் தவெக சார்பாக வரும் 18 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. பொதுக்கூட்டத்திற்காக செங்கோட்டையன் நேரடியாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு அளித்து இருந்தார். பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் 75 ஆயிரம் பேரைத் தாங்கும் அளவுக்கு பெரிய பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு தவெக ஆதரவாளர்களிடையே பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.


இந்நிலையில் எதிர்பாராத சிக்கல் ஒன்று உருவானது. பொதுக்கூட்டம் நடத்த மனு அளிக்கப்பட்டுள்ள நிலம், விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமானது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதனால், இந்த இடத்தில் கூட்டம் நடத்த அறநிலையத்துறை ஆணையரின் அனுமதி அவசியம் என்று மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி என்பவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி, கோவிலின் நிலத்தில் அரசியல் கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், தவெக மாநாடு நடத்த முன் காவல்துறை 84 நிபந்தனைகளை விதித்திருப்பது கூடுதலான சிக்கலை உருவாக்கியுள்ளது. அதனைப் பற்றி விளக்கம் அளிக்க நேரம் தேவைப்படுவதால் 16 ஆம் தேதிக்கு திட்டமிட்டிருந்த பொதுக்கூட்டத்தை 18 ஆம் தேதிக்கு மாற்றியிருந்த தவெக, தற்போது கோவில் நில விவகாரம் காரணமாக கூட்டமே நடைபெறுமா என்ற குழப்பத்தில் சிக்கியுள்ளது.