"ஆன்சைட் அருங்காட்சியகத்திற்கு எந்த தடையுமின்றி போதுமான நிதியை மத்திய அரசு வழங்கும்" - நிர்மலா சீதாராமன் பேட்டி

 
nirmala

ஆதிச்சநல்லூரில் மனிதர்களை புதைத்த இடங்களும் உள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

nirmala

ஆதிச்சநல்லூரில் ஆன்சைட் அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆதிச்சநல்லூரில் பரம்பு பகுதியில் கண்ட 2021 ஆம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன . ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்  இந்தியாவில் ஐந்து இடத்தில் மியூசியம் அமைக்கும் பணியில் முதன்முதலாக ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டு திறப்பதற்காக தயாரானது. அந்த வகையில் ஆதிச்சநல்லூரில் ஆன்சைட் அருங்காட்சியகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

tn

இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆதிச்சநல்லூரில் பல கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வில், இங்கிருந்து பல நாடுகளுக்கு வணிகம் நடைபெற்றது தெரியவந்துள்ளது;மனிதர்களை புதைத்த இடங்களும் இங்கு உள்ளது, அதில் அவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது;3,500 ஆண்டுகளுக்கு முன்னதாக உபயோகபடுத்தப்பட்ட நெல், திணை, தங்கம் ஆகியவற்றை நமது தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்; ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் ஆன்சைட் அருங்காட்சியகத்திற்கு எந்த தடையுமின்றி போதுமான நிதியை மத்திய அரசு வழங்கும் என்றார்.