"மத்திய நிதி அமைச்சர் தகுந்த நிதியை தருவார்" - உதயநிதி ஸ்டாலின்

 
udhayanidhi

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் கால்நடைகளை இழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண தொகையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில், வரலாறு காணாத கன மழை வெள்ளத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி தலா ரூ. 5 லட்சத்தை நிவாரண நிதியாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கி ஆறுதல் கூறினோம். 

tn

மேலும், மழை வெள்ளத்தால், கால்நடை மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண நிதி என மொத்தம் ரூ.58 லட்சத்து 14 ஆயிரத்தை முதற்கட்டமாக வழங்கினோம்.

பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நமது கழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என கூறினோம் என்று குறிப்பிட்டுள்ளார். 



முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி , அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்றுகின்றனர்; இதில் அரசியல் செய்ய வேண்டாம் தென்மாவட்டங்களில் முதலமைச்சர் அனைத்து நிவாரணப் பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார். வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடியிடம், நிவாரண நிதி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்; மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் பேரிடர் இல்லை என்றார்; தற்போது வெள்ள பாதிப்பை பார்க்க வருகிறார். வெள்ள பாதிப்பை பார்த்துவிட்டு தகுந்த நிதியை ஒதுக்குவார் என்று நம்புகிறோம் என்றார்.