யூபிஎஸ்சி தேர்வில் பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப்பெயர்! - பெரும் சர்ச்சை!

 
upsc upsc

யூபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் பெரியார் பெயருக்கு பின்னால் சாதிப்பெயர் போடப்பட்டு கேட்கப்பட்ட கேள்வி பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் இன்று யூபிஎஸ்சி முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், அதில் ஒரு கேள்வி பதிலில் பெரியார் பெயர் சாதி பெயருடன் இடம்பெற்று இருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்? என்ற கேள்வியில் பெரியார் பெயருடன் சாதி பெயர் சேர்க்கப்பட்டு இருந்தது. 

அந்த கேள்விக்கான பதிலில் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என சாதிப்பெயருடன் கேள்வி இடம்பெற்றிருந்தது. இதேபோல் மசோதாவை ஆளுநர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. நீதிமன்றம் ஆளுநரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சை கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.