நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

 
ttn

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த சூழலில்  மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கல்வி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது . நாளை வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், தேர்தல் பணிகளை துரிதமாக மேற்கொள்வது தொடர்பாகவும்  தேர்தல் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து,  விரிவாக அதிகாரிகளுடன்  ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

election

தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் சென்னையில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து வார்டு உதவி மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப்சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்கு சாவடிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு :-

*காய்ச்சல் பரிசோதனை ,முக கவசம் அணிதல், 6 அடி சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

*கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பு சுகாதார அதிகாரி நியமிக்கப்படுவார்.

rn


*பிரச்சாரத்தின் போது துண்டு சீட்டுகள் வழங்கும்போது முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

*கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் எந்த காரணத்திற்காகவும் பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது.

*வாக்குச் சாவடியில் 200 மீட்டருக்கு அப்பால் வாக்குச் சாவடி சீட்டு வழங்க தனித்தனி இடவசதி அமைக்க வேண்டும்.

*சமூக இடைவெளியை பின்பற்றி வாக்காளர்கள் வரிசையில் நிற்க குறியீடுகள் வரையப்பட வேண்டும்.