"உ.வே.சா பிறந்தநாளில் அவரது தமிழ்த்தொண்டைப் போற்றி வணங்குகிறேன்" - முதல்வர் ஸ்டாலின்

 
tn

உ.வே.சா அவர்களின் பிறந்தநாளில் அவரது தமிழ்த்தொண்டைப் போற்றி வணங்குகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

tn

உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்ற உ. வே. சாமிநாத ஐயர் தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார். இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் தமிழ்த் தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா. அவர்கள் 90-இற்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000-இற்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.
 


இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அழியக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் அச்சிலேற்றி, அழகிய நடையில் அவற்றுக்கு உரையும் எழுதி, தமிழுக்குத் தாம் தந்த பங்களிப்பினால் 'தமிழ்த்தாத்தா' என்று நிலைத்துவிட்ட நீடுபுகழ் உ.வே.சா அவர்களின் பிறந்தநாளில் அவரது தமிழ்த்தொண்டைப் போற்றி வணங்குகிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.