தடுப்பூசி போடலையா?? அப்போ சம்பளம் இல்லை...- மின் உற்பத்தி கழக அறிவிப்பால் பணியாளர்கள் அதிர்ச்சி..

 
representative image representative image

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத  பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என மதுரை மண்டல மின் உற்பத்தி மற்றும் பகிமான கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரை மண்டல தலைமை பொறியாளர் வெளியிட்டுள்ள சுற்ரறிக்கையில், “ மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள்,  கொரோனா தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாவது தவணையினை,  எதிர்வரும் 7 .12. 2021க்குள்  செலுத்திக் கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

கொரோனா தடுப்பூசி

அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என கடந்த 26.11. 2021 அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வாரியத்தலைவர் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

ஆகவே தங்கள் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தடுப்பு மருந்து செலுத்தி கொண்டதற்கான விபர அறிக்கையை தவறாமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உரிய மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க அறிவுறுத்தும் படி அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள்/ மதுரை மண்டலம் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இது குறித்த விரிவான அறிக்கையினை 7. 12. 2021 அன்று சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1