#BREAKING வாச்சாத்தி வழக்கு : தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்!!

 
high court

1992ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தருமபுரி வாச்சாத்தி மலைக்கிராம இளம் பெண்கள் 18 பேரை |அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வாச்சாத்தியில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டதாக கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ல் அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. 

இந்நிலையில் வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.  பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ₹10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

tn

பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்க்கு இழப்பீரு வழங்க வேண்டும்.. குற்றம் புரிந்தவர்களிடம் ₹5 லட்சம் வசூலிக்க வேண்டும். அப்போதைய எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட அல்லது அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று  நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என கடந்த 2011ம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

high court

12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.