போதைப்பொருளுக்கு எதிராக ஜன. 2ல் நடைபயணம்- வைகோ

 
வைகோ வைகோ

தனது சமத்துவ நடை பயணத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

Image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "பள்ளி, கல்லூரி மாணவர்களை சீர்கெடுக்கும் மது மற்றும் போதை பொருட்களில் இருந்து தடுப்பதற்கான சமத்துவ நடைப்பயணம் வருகின்ற ஜனவரி 2-ம் தேதி திருச்சி மாநகரில் தொடங்க உள்ளேன், வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறவும் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்திக்க உள்ளேன். திருச்சியில் தொடங்கும் சமுத்துவ நடைபயணம் வருகின்ற ஜனவரி 2-ம் தேதி தொடங்கி ஜனவரி 12ஆம் தேதி வரை ஒவ்வொரு கிராமமாக சென்று மக்கள், விவசாயிகளை சந்தித்திக்கவுள்ளேன். தி.மு.க. ஆட்சி மீண்டும் தொடர மற்றும் பல்வேறு கோரிக்கைகளுடன் ஜனவரி 2-ல் 180 கிலோ மீட்டர் சமத்துவ நடைபயணம் தொடங்கவுள்ளது.

Image

திருச்சியில் தொடங்கப்படும் இந்த சமத்துவ நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைப்பார். மதுரையில் முடியும் இந்த நடைப்பயணம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, சிபிஐ,சிபிஎம் மற்றும் விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த சமத்துவ நடைப்பயணம் தன்னுடைய ஒன்பதாவது நடைபயணம்” என தெரிவித்தார்.