“உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்”- படம்பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்த சொன்ன வைகோ

 
அ அ

சாத்தூரில் மதிமுக ஆலோசனை கூட்டத்தில் வைகோ பேசும்போது வெளியேறிய தொண்டர்களை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று நெல்லை மண்டல மதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றினார். அவரது உரையைக் கேட்காமல் கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர். அப்போது தொண்டர்கள் வெளியேறிய காட்சியையும் காலியான இருக்கைகளையும் செய்தி சேகரித்த செய்தியாளர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியேற்ற உத்தரவிட்டார். மேலும் கையில் உள்ள கேமராவை பறிமுதல் செய்யுமாறு கூறினார். 

இதைக் கேட்ட மதிமுக தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஜனனம், தந்தி டிவி, உள்ளிட்ட பல செய்தியாளர்களை சரமாரியாக தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் ஜனனம் செய்தியாளருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  மதிமுக தொண்டர்களிடமிருந்து காவல்துறையினர் செய்தியாளர்களை பத்திரமாக வெளியே மீட்டனர்.