என்றாவது ஒருநாள் பிரபாகரன் வருவார் - வைகோ
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பிறந்தநாள் விழா இன்று நாம் தமிழர், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கொண்டாடி வருகின்றனர். அதனொரு பகுதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 69 ஆவது பிறந்தநாள் விழா மதிமுக தலைமையகமான தாயகத்தில் கொண்டாடப்பட்டது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கேக் வெட்டி, பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “பிரபாகரன் என்றாவது ஒருநாள் வருவார் என்ற நம்பிக்கையோடு் அவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். பிரபாகரன் இருக்கிறார் என்ற எண்ணத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் புலிகளுடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியம்இல்லை” என்றார்.