“அறிந்தே செய்யும் அநீதி”- மத்திய அரசை கவிதையால் விமர்சித்த வைரமுத்து

 
மணிப்பூர் கொடூரம்: நம் தலையில் அல்ல காட்டுமிராண்டிகளின் தலையில் அடிக்க வேண்டும் -வைரமுத்து..

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் உரிமையும் நியாயமும் தேவையும் உள்ள தமிழ்நாடு போகிற போக்கில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது அறிந்தே செய்யும் அநீதி என கவிஞர் வைரமுத்து விமர்சித்துள்ளார்.

காவிச்சாயம் அடித்தால் திருவள்ளுவர் மதம் மாறிவிட மாட்டார் - வைரமுத்து.. 


2024 - 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.  இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்பட காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டி எழுந்துள்ளது. குற்றிப்பாக பாஜக கூட்டணி கட்சிகளான ஆந்திரா மற்றும்  பீகாருக்கு மட்டுமே அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம்  காட்டும் விதமாக ‘ஒருதலைபட்சமான பட்ஜெட்’ என எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. 

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, “ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் உரிமையும் நியாயமும் தேவையும் உள்ள தமிழ்நாடு போகிற போக்கில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது அறிந்தே செய்யும் அநீதி. தனக்கு எதிராகக் குடைபிடித்தவனுக்கும் சேர்த்தே பொழிவதுதான் மழையின் மாண்பு. மழை மாண்பு தவறிவிட்டது. நிதிநிலை அறிக்கையில் குறள் ஒன்று கூறுவது எழுதாத மரபு. இவ்வாண்டு விடுபட்டுள்ளது. எழுத வேண்டிய குறள் என்ன தெரியுமா? “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”” எனக் குறிப்பிட்டுள்ளார்.