“நானும் தூய்மைப் பணியாளர்கள் பக்கமே நிற்கிறேன்”- வைரமுத்து

 
 வைரமுத்து..  வைரமுத்து..

தூய்மைப் பணியாளர்கள் விரைவில் வேலைக்குத் திரும்ப வேண்டும்,  கோரிக்கைகள் காலப்போக்கில் கனிந்தே தீரும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

vairamuthu

இதுதொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில், “ஓர் உண்மையான சமூக மனிதன் தொழிலாளிகள் பக்கமே நிற்பான்; நானும் தூய்மைப் பணியாளர்கள் பக்கமே நிற்கிறேன். சராசரி மனிதர்களால் சாத்தியப்படாத தூய்மைப் பணியை நுரையீரலைப் பணயம்வைத்து ஈடேற்றுகிற ஈடற்ற தியாகிகள் அவர்கள். அவர்கள் எதிர்பார்ப்பது கருணையை அல்ல; உரிமையை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவை ஆறு அம்சத் திட்டத்தால் அவர்களின் வாழ்வுக்கு வளம்சேர்க்கவே கருதுகிறது. தூய்மைப் பணியாளர்கள் விரைவில் வேலைக்குத் திரும்ப வேண்டும்; கோரிக்கைகள் காலப்போக்கில் கனிந்தே தீரும். இது தொழிலாளிகள் உலகம் அவர்கள் நலம் சமுதாய நலம். அனைவர்க்கும் விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.