அதிமுக இணையவில்லை என்றால் புது கட்சி- வைத்திலிங்கம்

 
அதிமுகவில் இருக்கும் பலர் திமுகவுடன் கள்ள உறவு: வைத்திலிங்கம் அதிமுகவில் இருக்கும் பலர் திமுகவுடன் கள்ள உறவு: வைத்திலிங்கம்

இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக இணையவில்லையென்றால் புதிய கட்சி உருவாக்கப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu: Panneerselvam's spat with Dhinakaran stirs fresh political row

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக இணையவில்லையென்றால் புதிய கட்சி உருவாக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய கட்சி உருவாக்கப்படும்” என்றார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,  “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, அதிமுக தொண்டர்கள் உரிமை கழகமாக மாறியுள்ளது. 3 ஆண்டுகளாக கொடுத்த ஆதரவு, தியாக உணர்வு செயல்பாடுகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். டிசம்பர் 15 ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும்.கழகம் ஒருங்கிணைய வேண்டும், இல்லாவிடில் எங்களின் முடிவை மக்கள் ஏற்கும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள். நாம் கண்ணீர் விட்டு அழும் நிலையில், அதிமுக உள்ளது. தவறான நடைமுறை, தவறான பொதுக்குழு, தவறான பாதையில் அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது. சில சர்வாதிகாரிகளால் நம்முடைய இயக்கம் கடந்த 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்துவருகிறது.” என்றார்.