"வாளுக்கு வேலி அம்பலம் வீரத்தையும் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்" - ஈபிஎஸ்

 
ep

வாளுக்குவேலிஅம்பலம்  வீரத்தையும் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட, சிவகங்கை வட்டம், காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பாகனேரி, உள்ளது. இதன் தலைவராக இருந்தவர் வாளுக்குவேலி அம்பலம். மருது பாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய வாளுக்கு வேலி அம்பலத்தின் போர்ப்படைகள் வெள்ளையர்களுக்கெதிரான போரில் மருதுபாண்டியர்களுக்கு பெரிதும் உதவின. வேலு நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்களுடன் சேர்ந்து, இவர் போரில் ஈடுபட்டதை, சிவகங்கை சரித்திர அம்மானை சொல்கிறது.

tn

அக்டோபர் 24 ,1801 ல் கத்தப்பட்டு என்ற ஊரில் சூழ்ச்சியால் இவர் கொல்லப்பட்டார். அந்த இடத்தில் இவரின் நினைவாக, இவரது சகோதரர் கருத்தப்பன் அம்பலத்தால் நடுகல் வைத்து வணங்கி வருகின்றனர். அங்கு  வாளுக்குவேலி அம்பலம் சிலை கையில் ஈட்டி மற்றும் வளரி வைத்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.  இவருடைய நினைவாகவும் மற்றும் வீரத்தை போற்றும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூன் 10ஆம்  தேதி, அப்பகுதி மக்கள்  பொங்கல் படையலிட்டு, வீர வணக்க நாளாக கொண்டாடி வருகின்றனர்.



இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தென்னாட்டில் பெரும்படை திரட்டி, தாய்‌ மண்ணையும் மக்களையும் காக்க போரிட்ட மாவீரர், சுதந்திர போராட்ட வீரர்  " #வாளுக்குவேலிஅம்பலம் "  அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்."என்று குறிப்பிட்டுள்ளார்.