பாஜக நிர்வாகி கொலை - வானதி சீனிவாசன் இரங்கல்!

 
vanathi srinivasan vanathi srinivasan

பாஜக நிர்வாகி சக்திவேல்  படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழக பாஜக, மதுரை மாவட்ட OBC அணியை சேர்ந்த திரு.சக்திவேல் அவர்களை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வண்டியூர் டோல் கேட் அருகே வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும்.தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் குற்றங்கள் நடந்து வந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் குற்றசெயல்கள் தொடர்ச்சியாக நடப்பதும் அத்தகைய அராஜகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் காவல்துறை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் தமிழக மக்களுக்கு இந்த திராவிட மாடல் விடியா அரசு கொடுத்த அன்பு பரிசு. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எது வளர்ச்சி அடைந்ததோ இல்லையோ கொலை சம்பவங்களின் எண்ணிக்கை மட்டும் வளர்ச்சியடைந்துள்ளன.

Vanathi seenivasan

தமிழகத்தில் பெண்கள் தனியாக சென்று வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் திமுக எனும் திராவிட மாடலின் சித்தாந்தமா? எப்போது விடியல் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் இருந்து வருகின்றனர். இப்படி தொடர் அராஜகத்தை செய்து வரும் இந்த விடியா அரசுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.