அண்ணாமலை வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பாஜக கொடி கம்பம் அகற்றம் - வானதி சீனிவாசன் கண்டனம்

 
Vanathi seenivasan

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பாஜக கொடி கம்பத்தை அகற்றியதற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பு இருந்த பாஜக கொடி கம்பம் நள்ளிரவில் தமிழக போலீசாரால் அகற்றப்பட்டது.  பலத்த பாதுகாப்புடன் கிரேன் மூலம் அகற்றப்பட்ட நிலையில் தகவலறிந்து அண்ணாமலை வீடு முன்பு குவிந்த பாஜக தொண்டர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
சென்னை அருகே உள்ள பழைய ஊரில் உள்ள அண்ணாமலையின் வீட்டில் நெடுஞ்சாலைத்துறை அனுமதி வாங்காமல் கொடிக்கம்பம் வைத்ததாக தெரிகிறது.  அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜகவினருக்கும் அப்பகுதியில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பாஜக கொடி கம்பத்தை அகற்றியதற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த பா.ஜ.க கொடி கம்பத்தை நள்ளிரவில் அகற்றி உள்ளது அரிவாலயம் அரசு. கொடி கம்பம் அகற்றப்பட்டதற்கான கரணம் கேட்ட  பா.ஜ.க தொண்டர்களை அடித்து இழுத்து சென்றுள்ளது காவல்துறை. அரஜாகத்தின் உச்சத்துக்கே சென்றுள்ள திமுக அரசிற்கும் அதன் ஏவல் துறையாக செயல்படும் காவல்துறைக்கும் எனது கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.