சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு முத்தமிழ் செல்வி சிறந்த உதாரணம் - வானதி ஸ்ரீனிவாசன் வாழ்த்து..

 
vanathi--srinivas-3

சாதிக்கத்  துடிக்கும் பெண்களுக்கு முத்தமிழ் செல்வி ஒரு சாலச் சிறந்த உதாரணம் என எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண்ணுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஜோயல் பட்டியை சேர்ந்த 34 வயது பெண்மணி முத்தமிழ்செல்வி.  திருமணமாகி 2 பெண் பிள்ளைகளுக்கு தாயான இவர்  பயிற்சியாளர் திரிலோகசந்தர் உதவியால்  எவரெஸ்ட் சிகரம் ஏறும் தனது சாதனை பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் முத்தமிழ் செல்வி, கடந்த 23ம் தேதி  8,848.86 மீட்டர் உயரம் கொண்ட  எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து  அங்கேயே வீடியோ பதிவு செய்து அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பயிற்சியாளர் திரிலோகசந்தர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.  எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த  முதல் தமிழ் பெண் என்கிற  சாதனை படைத்த தமிழ்ச் செல்விக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  

சாதிக்கத்  துடிக்கும் பெண்களுக்கு முத்தமிழ் செல்வி சிறந்த உதாரணம்  - வானதி ஸ்ரீனிவாசன் வாழ்த்து..

அந்தவகையில் பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டர் பதிவில், “உலகின் மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தை 38 நாட்களில் 7150 மீ கடந்து , எவெரெஸ்ட் சிகரத்தை  தொட்ட  தமிழ்நாட்டின் முதல் பெண் என்னும் பெருமையை பெற்று, நம் மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி முத்தமிழ் செல்விக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! சாதிக்கத்  துடிக்கும் பெண்களுக்கு முத்தமிழ் செல்வி ஒரு சாலச் சிறந்த உதாரணம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.