முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்!
கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோரிக்கை மனுவை வழங்கினார்.
கோவை அனுப்பர்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நூலகம், அறிவியல் மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார், ரூ.300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமையவுள்ளது. இதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில் டைடல் பார்க் அருகில் மேலும் ஒரு தகவல் தொழில் பூங்கா அமைக்கப்படும்; அவினாசி சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலம், சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை நீடிக்கப்படும். தொண்டாமுத்தூர் பகுதியில் 10 கி.மீ. யானை புகாத வகையில் நவீன வேலிகள் அமைக்கப்படும் என கூறினார்.
இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சந்தித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வானதி சீனிவாசன் கோரிக்கை மனுக்களை அளித்தார். வானதி சீனிவாசனிடம் இருந்து கோரிக்கை மனுக்களை புன்னகையுடன் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உத்தரவாதம் அளித்தார்.


