தீரன் சின்னமலை நினைவு நாள்: வானதி சீனிவாசன் புகழஞ்சலி..!
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து தனது X சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
கொங்கு மண்ணின் வீரமகனும், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்திற்கு அஞ்சாமல் எதிர்த்து நின்ற மாமன்னரான தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினத்தில், நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற தியாகங்களையும், மக்கள் நலப் பணிகளையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.
இளைஞர்களின் மனதில் வீரம் விதைத்து, விடுதலை வேட்கையைத் தூண்டிய தீரன் சின்னமலை அவர்களின் வீரமும், தியாகமும், தேசப்பற்றும் என்றும் நம் வரலாற்றில் அழியாப் புகழாக நிலைத்திருக்கும்.
கொங்கு மண்ணின் வீரமகனும், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்திற்கு அஞ்சாமல் எதிர்த்து நின்ற மாமன்னரான தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினத்தில், நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற தியாகங்களையும், மக்கள் நலப் பணிகளையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.
— Vanathi Srinivasan (@VanathiBJP) August 3, 2026
இளைஞர்களின்… pic.twitter.com/LMiWdJfjdp