ஒரேநாளில் நடுங்க வைக்கும் தொடர் படுகொலைகள், என்னதான் நடக்கிறது தமிழகத்தில்?- வானதி சீனிவாசன்

 
Vanathi seenivasan

வந்தாரை வாழவைத்த தமிழகம், இன்று திராவிட மாடல் ஆட்சியில் வன்முறைக் கரங்களால் சூழப்பட்டுள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

‘வேல் யாத்திரை தடை பாரபட்ச செயல்’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “

📌சிவகங்கையில் பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் திரு. செல்வக்குமார், அதே பகுதியில் மர்மநபர்களால் விரட்டிப் படுகொலை.

📌கடலூரில் அதிமுக மாநகராட்சி நிர்வாகி திரு. பத்மநாபன், பாகூர் அருகே பட்டப்பகலில் விரட்டிப் படுகொலை.

📌கன்னியாகுமரியில் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகி  திரு. ஜாக்சன், நடுரோட்டில் துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு, உங்கள் கூட்டணிக் கட்சி உட்பட, தமிழகத்தின் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த மூன்று அரசியல் நிர்வாகிகள் ஒரே நாளில் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்றால், சாமானிய மக்களின் நிலையை நினைக்கையில் நெஞ்சம் பதறுகிறது. 

திராவிட மாடலின் கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில், பாமர மக்கள் முதல் பெரும் பின்புலம் கொண்ட அரசியல் தலைவர்கள் வரை எவர் உயிருக்கும் பாதுகாப்பில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. 

பட்டப்பகலில் ஒருவரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யுமளவிற்கு, நமது காவல்துறையின் மீதும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மீதும் குற்றவாளிகளுக்கு பயம் விட்டுப்போனது ஏன்?

வானதி

மேலும், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்கள் குறித்த கேள்விகளுக்கு, “முடிந்த அளவு நடவடிக்கை எடுப்போம்" என்று தமிழக சட்டமன்ற தலைவர் திரு. அப்பாவு அவர்களும் மற்றும் "பழிவாங்கல் உணர்ச்சியில் நடக்கும் குற்றங்களுக்கு, தமிழக அரசு பொறுப்பாகாது” என்று  திமுக அமைச்சர் திரு. ரகுபதி அவர்களும் தார்மீக பொறுப்பு சிறிதுமின்றி சகஜமாக பதில் கூறுகின்றனர். 

இவ்வாறு பொறுப்பற்ற திமுக தலைவர்களையும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும் தனது நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கும் நமது சர்வாதிகாரி முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின்  அவர்கள், இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அடக்குவேன் என்று முழங்கியது என்னவாயிற்று?   கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருட்கள் என திரும்பும் இடமெல்லாம் பாதுகாப்பின்றி தமிழக மக்கள் திணறுகிறார்கள். 

தமிழக மக்களை எந்நேரமும் கிலியின் பிடியில் வைத்திருப்பதுதான் உங்கள் திராவிட மாடலா திரு. மு.க.ஸ்டாலின்?...  மத்திய அரசைக் குறை கூறுவதிலும், பொய் பரப்புரைகளைப் பரப்புவதிலும் ஆர்வமுடன் விரைந்து செயலாற்றும் நீங்கள், தமிழக மக்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் தொடரும் படுகொலைகளைக் கட்டுப்படுத்துவதிலும் சற்று கவனம் செலுத்துங்கள் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.