180 கிமீ வேகத்தில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்... கண்ணாடி குவளைகளில் இருந்து சிந்தாத தண்ணீர்..!
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயன்பாட்டிற்காகவே வழித்தடங்கள் பிரத்யேகமாக மேம்படுத்தப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளில் 76 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அடுத்தகட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகம் செய்யும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில்கள் பயணிக்கின்றன.
2019 முதல் 2022 வரை வந்தே பாரத் 1.0 ரயில்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தன. அதன்பிறகு வந்தே பாரத் 2.0 ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வந்தே பாரத் 3.0 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்தன. இதன் பிரதான சிறப்பம்சம் என்பது 52 வினாடிகளில் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு சீறிப் பாய்ந்து விடும்.
இதுதவிர இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான கப்லிங் இணைப்பில் மேம்பாடு, உயர்தர ஏசி வசதி, UV-C அடிப்படையிலான கிருமிகள் தாக்காத தொழில்நுட்பம், தீ கண்டறியும் நவீன வசதி, கவாச் பெட்டிகள், நவீன சிசிடிவி கேமராக்கள், முழுவதும் சீல் செய்யப்பட்ட தானியங்கி கதவுகள், ஓட்டுநர் – கார்டு தகவல் தொடர்பு பதிவு வசதி உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் நான்காம் தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை நடத்தப்பட்டது. ரயில்வே அமைச்சகம் நடத்திய சோதனையில், இந்த புதிய "வந்தே பாரத்" ஸ்லீப்பர் ரயில் 180 கிலோமீட்டர் வேகத்தை எட்டியுள்ளது. இந்த ரயிலில் மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் வசதிகள் உள்ளன. அதிலும், சோதனை ஓட்டத்தின் போது கண்ணாடியில் நிரம்பிய தண்ணீர் வெளியேறாமல் இருப்பது இந்த ரயிலின் மென்பொருள் மற்றும் பொறியியல் சிறப்பை காண்பிக்கிறது. இந்த புதிய ரயிலின் மூலம் இந்திய ரயில்வே பயணிகள் விரைவான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை எதிர்பார்க்கலாம்
राजस्थान में 180 किमी की रफ्तार में दौड़ी वंदे भारत, नहीं छलका पानी से भरा ग्लास#Rajasthan pic.twitter.com/src5CiYAsg
— NDTV Rajasthan (@NDTV_Rajasthan) November 4, 2025


