‘பணம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும்’ லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது

 
VAO

உசிலம்பட்டி அருகே பட்டா மாறுதலுக்காக 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரம்யா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.போத்தம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரம்யா. இவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துபேயத்தேவர் என்பவருக்கு சொந்தமாக கே.போத்தம்பட்டியில் உள்ள இடத்தை தனது மகன் காசிமாயன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.9 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து முத்துபேயத்தேவர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில், இன்று லஞ்ச ஒழிப்பு போலிசாரின் வழிகாட்டுதலின் படி ரசாயனம் தடவிய ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை கிராம நிர்வாக அலுவலர் ரம்யாவிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலிசார் கிராம நிர்வாக அலுவலர் ரம்யாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.