போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் கைது

 
tn

 கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். 

tn

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து கர்நாடக முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.  இதை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் மற்றும்  கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

tn

இதன் காரணமாக பெங்களூரில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இன்று தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றன. இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

tn

இந்நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடக்கூடாது என்று வலியுறுத்தி கன்னட சலுவளி  வாட்டல் கட்சியின் தலைவர் வாட்டாள்  நாகராஜ் இன்று போராட்டம் நடத்தினார்.  போராட்டத்தை முன்னிட்டு பெங்களூரு டவுன்ஹால் பகுதியில் இருந்து சுதந்திரப் பூங்கா வரை பேரணி செல்ல திட்டமிட்டு இருந்தார்.  பேரணியாக சென்று போராட்டத்தில் கலந்து கொண்ட அவரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.  பெங்களூருவில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.