விசிக தலைவர் திருமாவளவன் பழனி முருகன் கோயிலில் வழிபாடு

 
thiruma


விசிக தலைவர் திருமாவளவன் பழனி முருகன் கோயிலில் வழிபாடுவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பழனி முருகன் கோயிலில் வழிபாடு செய்தார். 

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சி தலைவராக விளங்கி வருபவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவரது கட்சி தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துள்ளது. இதேபோல் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. 

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பழனி முருகன் கோயிலில் வழிபாடு செய்தார். அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் கோயில் அர்ச்சகர்கள் திருமாவளவனுக்கு பல்வேறு நினைவு பரிசுகளை வழங்கினர்.