இனிவரும் காலங்களில் அம்பேத்கர் சிலைகளை வெண்கல சிலையாக நிறுவ வேண்டும்- திருமாவளவன்
தமிழக முழுவதும் இனி அம்பேத்கர் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரக்கோணம் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலையை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சிகள் பேசிய அவர், “இனிவரும் காலங்களில் நிறுவக்கூடிய அம்பேத்கர் சிலைகளை வெங்கல சிலையாக நிறுவ வேண்டும். இதனை தொடர்ந்து இரண்டு குழந்தைகளுக்கு அவர் பெயர் சூட்டி வைத்தார். இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்திலிருந்து இளைஞர் அணி பொறுப்பில் இருந்த முக்கிய நிர்வாகிகள் விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்தனர்.
முன்னதாக ராணிப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், “வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு உச்ச நீதிமன்றம் தற்பொழுது தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் பாசிச பாஜக அரசு தொடர்ந்து சிறுபான்மையரை வஞ்சிக்கும் வண்ணமாக செயல்படுகிறது. மேலும் இந்த வகுப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மே மாத இறுதியில் வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் மாண்புமிகு மம்தா பானர்ஜி அவர்கள் வக்பு திட்டம் அமல்படுத்த மாட்டோம் என வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதேபோன்று தமிழக முதல்வரும் தமிழகத்தில் வக்பு சட்டத்திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற்றது. அதேபோன்று வக்பு சட்ட திருத்தத்தையும் திரும்ப பெற வேண்டும்” என்றார்.


