”FIR இல்லாமல் விசாரித்தது போலீசாரின் அத்துமீறல்”- திருமாவளவன்

 
ச் ச்

திருப்புவனம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறினார். 

Image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “போலீஸ் விசாரணையில் இளைஞர் மரணம் அடைந்த விவகாரத்தில் FIR இல்லாமல் விசாரித்தது போலீசாரின் அத்துமீறல். FIR இல்லாமல் எப்படி வழக்குப்பதிவு செய்தார்கள்? எப்படி விசாரணை நடத்தினார்கள்? காவல்துறை எப்படி புலன் விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் 11 கட்டளை விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை எந்த காவல்துறையும் பின்பற்றுவதில்லை. மடப்புரம் கோயில் காவலாளி அஜித் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பது அவரது நேர்மையைக் காட்டுகிறது.

காவல்துறையில் முரட்டுதனமான போக்கு நீடிப்பது வேதனை அளிக்கிறது. அரசு கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும்.. அஜித்குமாரின் மரணம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தது ஆறுதல் தருகிறது. அஜித்குமார் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். திமுக, அதிமுக என இல்லாமல் எல்லா ஆட்சிக்காலத்திலும் போலீசாரின் விசாரணை முறை, வரம்புகளை மீறி தான் இருக்கிறது. நானே முதல்வராக இருந்தாலும், லாக் அப் மரணங்களை தடுக்க முடியாது” என்றார்.