"விஜய்யை கைது செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்தவில்லை, ஆனால்..”- திருமாவளவன்
பாஜகவிற்கு உண்மையிலே சொரணை இருந்தால் கொள்கை எதிரி என்று அறிவித்த விஜயுடன் உறவாட வழிந்து முயற்சி செய்ய மாட்டார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் கரூர் பரப்பரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் கரூர் பரப்பரை கூட்டத்தில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி மரணம் அடைந்த 41 பேருக்கும் அகல் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தி உள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலா 50,000 நிவாரணம் வழங்கப்படும். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை கடந்து இதை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று பாஜக மற்றும் கூட்டணி அதன் ஆதரவு அமைப்புகள் முயற்சி செய்கின்றன. இது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
விஜய் கைது செய்ய வேண்டும் சிறை படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்த வில்லை. ஆனால் இந்த சம்பவத்திற்கு அவர் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் அதன் வெளிப்பாடு அவரது நடவடிக்கையில் இல்லை என்ற அடிப்படையில் தான் எங்களது விமர்சனத்தை வைக்கிறோம். தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை இந்த பிரச்சனையை நேர்மையாக அணுகி கொண்டு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்ற படிப்பினையை நாம் பெற வேண்டும். விஜய் மட்டுமல்ல ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவருக்கும் இது பாடம் என்று விசிக கருதுகிறது. தலைமை நீதிபதி மீது ஏற்கனவே இயல்பாக அவர்களுக்கு உள்ள வண்ணம் தான் இந்த செருப்பு வச்சு சம்பவத்திற்கு காரணம். சனாதன ஆதரவாளர்கள் மற்றும் சனாதன எதிர்பாளர்கள் என்று தான் இதை அணுக வேண்டும்.

பாஜக செய்யும் சூதாட்டத்தை நாங்கள் அம்பலப்படுத்துகிறோம் என்ற வயிறெரிச்சலில் இல்லாத கட்டுக் கதைகளை அண்ணாமலை கூறுகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை அவ்வளவு இலகுவாக யாராலும் சிதறடித்து விட முடியாது. திரை கவர்ச்சிக்கு வழியாக கூடியவர்கள் இந்த இயக்கத்தில் இல்லை கொள்கை சார்ந்தவர்களால் இந்த இயக்கத்தை வழி நடத்துகிறார்கள். பாஜகவிற்கு உண்மையிலே சொரணை இருந்தால் கொள்கை எதிரி என்று அறிவித்த விஜயுடன் உறவாட இவர்கள் வழிந்து முயற்சி செய்ய மாட்டார்கள். நெரிசல் சாவு என்பதை வேறு யாராவது வெளிப்புறத்தில் இருந்து ஏற்படுத்த முடியுமா? ஆனால் திட்டமிட்டு கொலை நடந்தது போல திரித்து பேசும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது. போதுமான இடம் அளிக்கவில்லை என்றால் நாங்கள் நடத்த மாட்டோம் என்று கூற வேண்டியது தானே. 2021 தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதும் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. படுதோல்வி அடைந்தார்கள். பாஜக சார்பில் ஏன் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. வழிந்து வந்து இது நிர்வாக தோல்வி என்று நிர்வாக முயற்சி செய்கிறார்கள். முதலமைச்சரும் அமைச்சர்களும் நள்ளிரவில் பொறுப்புணர்வோடு வந்தார்கள்அவர்களை பாராட்டத்தான் செய்ய வேண்டும். விஜயை கையில் எடுக்க பாஜக முயற்சி செய்கிறது. அவர் சுதந்திரமாக செயல்பட வேண்டும்” என்றார்.


