"எச்.ராஜாவின் மற்றொரு குரலே விஜய், சீமான் பேச்சு " - திருமாவளவன்

 
a a

எச்.ராஜாவின் மற்றொரு குரலாக தான் விஜய், சீமான் பேச்சு வெளிப்படுகிறது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

da


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், “மகாத்மாகாந்தி பெயரால் இத்தனை ஆண்டு காலம் இயங்கி கொண்டு இருந்த ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பா.ஜ.க. அரசு தரம் தாழ்ந்து அரசியல் செய்வதற்கு இத்தகைய சான்று வேறு இல்லை. மிக அர்ப்பணமான அரசியல். தேசத்தால் உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர். தேச பிதா என்று போற்றப்பட கூடியவர்.  அவருடைய விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கருத்தியல் மோதல் இருந்தாலும் கூட தேசிய விடுதலை போராட்டத்தை மதிக்கிற்து. பெயர் மாற்றம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் 24ந் தேதி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கலந்து கொள்ளும். 23 ந்தேதி இடது சாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து போராட்டம் அறிவித்து இருந்தோம். அந்த போராட்டம் 24ந் தேதி நடக்கும். விஜய் ஒவ்வொரு நிகழ்வும் பேச்சும் திமுக வெறுப்பை மட்டுமே மையமாக கொண்டு உள்ளது. நாட்டை பற்றியோ மக்கள் நலன்கள் பற்றியோ இருப்பதாக தெரியவில்லை. திமுக வெறுப்பை மட்டுமே பரப்புரையை தனது கடமையாக கொண்டு செயல்படுகிறார்.. மக்கள் கவனித்து வருகின்றனர். அவரது திட்டம் நோக்கம் என்ன என்பதை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். தேர்தலில் அது வெளிப்படும். திமுக மீது குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சொல்லியவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது வரலாறாக இருக்கிறது. ஜெயலலிதா, எச்.ராஜா ஆகியோர் சொன்னதையே பேசுகிறார். எச்.ராஜாவின் மற்றொரு குரலாக தான் விஜய், சீமான் பேச்சு வெளிப்படுகிறது. இவர்கள் எல்லாம் யார் என்பது வெளிப்படையாக தெரியவருகிறது. தேர்தல் நேரத்தில் தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்” என்றார்.