கொள்கைக்காகவே திமுக கூட்டணியில் விசிக உள்ளது- திருமாவளவன்

 
 “மதுவிலக்கு மாநாட்டை அரசியலோடு இணைத்து பார்க்காதீங்க..” - திருமாவளவன்...

திகவும் திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி என்றால் அந்த துப்பாக்கியின் மூன்றாவது குழல் விசிக என்று பெருமையாக சொல்வேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Image

சென்னை புரசைவாக்கத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் மக்கள் மன்றம் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ரத்தின ராஜாவுக்கு பாராட்டு விழா மற்றும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்களும், திமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

மேடையில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “திமுக கூட்டணியில் இணைந்து ஏழு ஆண்டுகளுக்கு விசிக பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை தொடர்ந்து எழுப்பி வருகிறது. இது போன்ற விவகாரங்களில் திமுகவிற்கும், விசிகவிற்கும் புரிதல் உண்டு. இதுதான் அரசியல் முதிர்ச்சி.  திருமாவளவன் உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று கலைஞர் சொல்வார், அதுபோல தான். திராவிட அரசியலுக்கும், கலைஞருக்கு எதிராக எவ்வளவோ சதிவலைகள் பின்னப்பட்டாலும் அதை கடந்து தான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. கொள்கைக்காகவே திமுக கூட்டணியில் விசிக உள்ளது

மது ஒழிப்பு மாநாடு பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. வான்படை சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு உயர் மட்ட குழு அமைப்பதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.