“திமுகவை மட்டுமே நம்பி இல்லை”- திருமாவளவன் பேச்சால் உச்சக்கட்ட பரபரப்பு
திமுகவை மட்டுமே நம்பி இல்லை. நாம் திமுகவை மட்டுமே நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தொண்டர்களுக்கான முகநூல் நேரலையில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுகவை மட்டுமே நம்பி இல்லை. நாம் திமுகவை மட்டுமே நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டுமென நாம் சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்.விசிக முன்னணி தோழர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றனர். அரசியல் தொடர்பான விவாதங்களில் தலைமையின் முடிவை அறிந்து கருத்து சொல்ல வேண்டும். அல்லது சொல்லாமல் தவிர்க்கலாம். ஒரு சில மாதங்களில் கூட்டணி விஷயங்கள் தீவிரமாகும்.
திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவதில் சிலர் குறியாக உள்ளனர். அவர்களுக்கு இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு விசிகதான். அம்பேத்கரின் அரசமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்கிறார்கள். அதை வேடிக்கை பார்க்க முடியாது. எந்த எதிர்பார்ப்புமின்றி, கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் துணிவு, தெளிவு வேண்டும். எங்களது தொலைநோக்கு பார்வையை பொறுத்துக் கொள்ளாத அற்பர்கள் அவதூறு பரப்புகின்றனர்.


