“திமுக கூட்டணிக்கு விழும் 100 வாக்குகளில் 25 விசிக வாக்குகள்”- திருமாவளவன்

 
ச் ச்

மீண்டும் திராவிட மாடல் அரசு அமையும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “மீண்டும் திராவிட மாடல் அரசு அமைய விசிக உறுதுணையாக இருக்கும். திமுக கூட்டணிக்கு விழும் 100 வாக்குகளில் 25 விசிக வாக்குகளாக இருக்கும். விசிக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு கொத்துக் கொத்தாக விழும். இந்தியாவுக்கே முன் மாதிரியான ஆட்சி நிர்வாகத்தை நடத்திவருகிறார் ஸ்டாலின். நடப்பாண்டில் அயகலத்தில் கல்வி பயில உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்கும் வகையில் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு மேலும் கூடுதலாக முதலமைச்சர் நிதி ஒதுக்க வேண்டும். 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பட்டியலின மக்களின் கல்வி வளர்ச்சி விகிதம் 1.5% தான். தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் வளர்ச்சி விகிதம் 78% ஆக உயர்ந்துள்ளது. இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.