தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது - திருமாவளவன்
தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தம் செய்யக்கூடாது என்பதுதான் இதில் சரியான கருத்து என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் 63 வது பிறந்தநாள் நாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் கலந்து கொண்டு பாடலுடன் சிறப்புறையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமாவளவன், “தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்களின் குரலோடு இணைந்து நாமும் சொன்னாலும், குப்பை அள்ளும் தொழிலை நிரந்திரப்படுத்தி அதையே நீங்கள் காலம் முழுவதும் சய்ய வேண்டும் என சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. குப்பை அள்ளும் தொழிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்பது தான் எங்களின் போராட்டம்.. பணி நிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யுங்கள் என்பது ‘குப்பை அள்ளுபவனே குப்பை அள்ளட்டும்’ என்ற குரலுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அவர்களை பணிநிரந்தரம் செய்யக் கூடாது என்பதே சரியான கருத்து. அதிகாரம் நமது சட்டபூர்வமான உரிமை மட்டுமல்ல, அது ஒரு சொத்தும் கூட... எங்களின் கூட்டணி மிக வலிமையாக உள்ளது... கண்ணுக்கெட்டிய தூரம் வரை இந்த கூட்டணியை வீழ்த்த எதிரிகள் இல்லை. திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே முரண்கள் இருக்கலாம், சமூகநீதி என்ற ஒரு புள்ளியில் இணைந்திருகிறோம். மதசார்பற்ற சக்திகள், மதசார்பு சக்திகளுக்கிடையான பிரச்சினையை
மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.” என்றார்.


