“விசிகவின் உழைப்பால்தான் திமுக இத்தனை இடங்களில் வெற்றி பெற்றது”- திருமாவளவன்

 
திருமாவளவன்

வி.சி.க-வின் வாக்குகள் த.வெ.க-வுக்கு சென்றதால் தான் திமுக தோல்வியுற்றதாக தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டில் மோடி வித்தை எடுபடாததற்கு இதுதான் காரணம்..”- திருமாவளவன்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “வி.சி.க-வின் பங்களிப்பால் நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க 59 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. 59 இடங்களில் வெ்றி பெற்றதில் வி.சி.க.வின் பங்கும் இருக்கி்றது. அதை யாரும் பேசமாட்டார்கள். வி.சி.க-வின் வாக்குகள் த.வெ.க-வுக்கு சென்றதால் தான் தி.மு.க தோல்வியுற்றதாக தவறான தகவல்களை பரப்புகிறார்கள். வி.சி.க-வுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. விசிகவை உளவியல் ரீதியாக தனித்துவிட நினைக்கிறார்கள். முதலமைச்சராக்குங்கள், துணை முதலமைச்சராக்குங்கள் என நாங்கள் கேட்கவில்லை. இப்போது நோபல் பரிசுக்கும் என்னை பரிந்துரைக்கிறார்கள், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? வைகோவிற்கு யுனஸ்கோ விருது கொடுக்கலாம். வழக்கமான அணுகுமுறை அரசியல் மரபுகளை கடந்து ஜனநாயகம் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை திமுக, அதிமுக என இரு அணியாக எதிர்கொண்டது தான் அரசியல் கலாச்சாரம். தமிழகத்தில் 3ஆவதாக தோன்றும் அணிக்கு கடந்த 10 ஆண்டுகளில் வலிமை கிட்டவில்லை, தற்போது கிடைத்துள்ளது. காங்கிரசுக்கு எதிராக மாநில கட்சிகளை வளர்த்துவிட்டு அதனை பின்னர் குறிவைத்து அழிக்கும் வேலையை பாஜக செய்கிறது .

RSS பெற்ற பிள்ளை தவெக என விமர்சனம் செய்த திருமாவளவன் ஏன் விஜய்க்கு ஆதரவு கொடுத்தார் என்று கேட்கிறார்கள். விஜயிடம் சென்று உங்களை RSS-ன் பிள்ளை என திருமா விமர்சனம் செய்தார். ஏன் அவரிடம் ஆதரவு கேட்டீர்கள் என கேட்க முடியுமா? திமுகவுடன் நட்பு என்று சொன்ன என்னை விமர்சிக்கிறார்கள். திமுகவை தீயசக்தி என சொன்ன விஜயை வீட்டில் வரவேற்றது ஏன் என்று கேட்கவில்லை? பழைய உறவுகளை உதறிவிட்டு ஒட்டிக்கொள்ள முடியுமா? என்று நான் கேட்டதில் என்ன தவறு உள்ளது. "BALANCING" ஆக அரசியல் செய்கிறேன். கூட்டணி, தேர்தல், வெற்றி, தோல்வி பற்றி கவலை இல்லை. தவெக ஆட்சி நியமனம் எல்லாம் ஏதோ நான் சொல்லிதான் நடப்பதாக கூறுகின்றனர். தலித் அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் உடனே நான் சொல்வதாக அர்த்தமா? ” என்றார்.