“இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம்”- திருமா

 
“இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம்”- திருமா

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதலமைச்சர் விஜய் அவர்களின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

null


முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இல்லங்களுக்கு சென்று வாழ்த்து பெற்றார். இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில், “மேனாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மேனாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதல்வர் விஜய் அவர்களின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம். முதல்வருக்கும் அவரை ஆரத்தழுவி வரவேற்ற மேனாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கும் எமது மனம் நிறைந்த பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.