சாதிவெறியால் கோவில் தேரை எரித்த கோவில் அறங்காவலர்- வன்னி அரசு கண்டனம்

 
ச் ச்

ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிக்கு தேர் செல்ல உயர்நீதிமன்றம் அறிக்கை கேட்டிருந்த சூழலில், நேற்று இரவு சாதி இந்துக்கள் தேரின் ஒரு பகுதியை தீ வைத்து கொளுத்தியுள்ளதாக விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம் சாட்டியுள்ளார்.

Image

இதுதொடர்பாக விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “#தேர்_எரிப்பு இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கொளக்கியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த 40 ஆண்டுகளாக ஓடவில்லை. காரணம் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் குடியிறுப்பு பகுதிக்குள் தேர் வருவதற்கு சாதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நிறுத்தப்பட்டது. தற்போது கடந்த 5.9.2025 அன்று தேர் ஓடுவதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் சாதி இந்துக்களின் எதிர்ப்பால் ஆதிதிராவிடர்கள் உயர்நீதிமன்றத்துக்கு சென்றார்கள். விடுதலைச்சிறுத்தைகளின் வழக்கறிஞர் தோழர் பார்வேந்தன் தலைமையிலான வழக்கறிஞர்கள் வழக்கை நடத்தினர்.

Image

ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிக்கு தேர் செல்ல உயர்நீதிமன்றம் அறிக்கை கேட்டிருந்த சூழலில், நேற்று இரவு சாதி இந்துக்கள் தேரின் ஒரு பகுதியை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். கொளக்கியம்மன் கோவில் அறங்காவலர் ராஜ்குமார் தலைமையிலான கும்பல் தான் தொடர்ந்து சாதிவெறியுடன் அப்பாவி வன்னிய மக்களை வழிநடத்துகிறது. இந்த தீவைப்பிலும் இந்த கும்பல் தான் ஈடுபட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அறங்காவலர் ராஜ்குமாரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு சேகர்பாபு அவர்களிடம் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதுமட்டுமல்ல, தேரை எரித்த வழக்கில் சம்மந்தப்பட்ட அத்தனை குற்றவாளிகளையும் காவல்துறை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.