“அது நாம் தமிழர் அல்ல, ஓம் தமிழர்”- வன்னி அரசு
RSS ன் கிளை அமைப்புகளில் நாதகவும் ஒன்று.அது நாம் தமிழரல்ல; ஓம் தமிழர் என நான் தொடர்ந்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வந்தேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Vanni%20arashu.jpg)
இதுதொடர்பாக வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில், “RSS ன் கிளை அமைப்பான vigil நடத்திய பாரதியார் விழாவில் நாதக சீமான் பங்கேற்று உளறியிருப்பதை காண முடிந்தது. RSS ன் கிளை அமைப்புகளில் நாதகவும் ஒன்று.அது நாம் தமிழரல்ல; ஓம் தமிழர் என நான் தொடர்ந்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வந்தேன்.பார்ப்பன கடப்பாறையால் திராவிடத்தை இடிப்பேன் என்று சொன்னதன் மூலம், ஆரியத்தின் கூலிப்படையாக சீமான் மாறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
#RSS ன் கிளை அமைப்பான #vigil நடத்திய பாரதியார் விழாவில் #நாதக @Seeman4TN பங்கேற்று உளறியிருப்பதை காண முடிந்தது.#RSS ன் கிளை அமைப்புகளில்
— வன்னி அரசு (@VanniKural) December 14, 2025
நாதகவும் ஒன்று.அது
நாம் தமிழரல்ல; ஓம் தமிழர் என
நான் தொடர்ந்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வந்தேன்.
பார்ப்பன கடப்பாறையால் திராவிடத்தை…
“பார்ப்பனியத்தின் கொடுமை அறிய வேண்டுமானால்
நீ பரையனாக வாழ்ந்து பார்” என்றார் கவிஞர் இன்குலாப். அப்படிப்பட்ட பார்ப்பனியத்தோடு குடும்பம் நடத்தும் சீமானை போன்ற போலி தமிழ்த்தேசியக்கும்பலிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீமான் RSS ன் தொங்கு சதை தான் என்பதை 2012 ஆம் ஆண்டு நான் எழுதிய கட்டுரையை படித்துப்பாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


