“ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு”- வன்னி அரசு
தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு தெரிவித்த நிலையில், விசிக எம்.எல்.ஏ. வன்னியரசின் எக்ஸ் தள பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் தவெக 107 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் திருச்சி மற்றும் பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் விஜய் வெற்றி பெற்றார். காங்கிரஸ் 5 இடங்களில் வென்ற நிலையில், காங்கிரஸ் ஆதரவு அளித்ததை தொடர்ந்து தவெகவின் பலம் 113 ஆனது. இதனை தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் (4) மற்றும் விசிக (2)ஆதரவு கிடைத்துள்ளதை அடுத்து, ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை விஜய் அவர்கள் எட்டியுள்ளார். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடித்த நிலையில், விசிகவின் ஆதரவு விஜய்க்கு மிக முக்கிய அரசியல் பலமாக பார்க்கப்படுகிறது.
ஆட்சியிலும் பங்கு
— வன்னி அரசு (@VanniTamizhVCK) May 8, 2026
அதிகாரத்திலும் பங்கு
இது திருமா காலம்-இனி
உயர்வோம் மேலும் மேலும்!
- வன்னி அரசு pic.twitter.com/m5dHrBb4KB
இந்நிலையில் விசிக எம்.எல்.ஏ. வன்னிஅரசு தனது எக்ஸ் தளத்தில், “ஆட்சியிலும் பங்கு
அதிகாரத்திலும் பங்கு
இது திருமா காலம்-இனி
உயர்வோம் மேலும் மேலும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

