#BREAKING தவெக ஆட்சி தவறான பாதையில் சென்றால் ஆதரவு வாபஸ்- விசிக எச்சரிக்கை

 
ச்

தவெக ஆட்சி தவறான பாதையில் சென்றால் நிச்சயம் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்பதில் சந்தேகம் வேண்டாம் என விசிக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Image

சட்டமன்ற தேர்தலில் தவெக 107 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் திருச்சி மற்றும் பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் விஜய் வெற்றி பெற்றார். காங்கிரஸ் 5 இடங்களில் வென்ற நிலையில், காங்கிரஸ் ஆதரவு அளித்ததை தொடர்ந்து தவெகவின் பலம் 113 ஆனது. இதனை தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் (4) மற்றும் விசிக (2)ஆதரவு கிடைத்துள்ளதை அடுத்து, ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை விஜய் அவர்கள் எட்டியுள்ளார். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடித்த நிலையில், விசிகவின் ஆதரவு விஜய்க்கு மிக முக்கிய அரசியல் பலமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விசிக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “மக்கள் முடிவு தவெகவை தனிப்பெரும் கட்சியாக தேர்வு செய்தது.தமிழ்நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சியையும் மறுதேர்தலையும் தவிர்க்க தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதுதான் வழி.தவெக ஆட்சி தவறான பாதையில் சென்றால் நிச்சயம் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்பதில் சந்தேகம் வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.