விசிக முதன்மை செயலாளர் உஞ்சைஅரசன் மறைவு - ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிப்பு

 
tn

விசிக முதன்மை செயலாளர் தோழர் உஞ்சைஅரசன் மறைவையொட்டி கட்சியின் கொடிகள் ஒரு வார காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்  முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன்  உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக நண்பகல் வரை அம்பேத்கர் திடலில் வைக்கப்படுகிறது.பின்னர் பட்டுகோட்டையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் முதன்மை செயலாளர்  தோழர் உஞ்சைஅரசன் அவர்கள் காலை 10.17 மணியளவில் தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த அக்டோபர் -02 அன்று மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  மூன்று வார காலமாக சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு இன்று இதயம் செயலிழந்த நிலையில் உயிரிழந்தார்.

tn

அவரது உடல் கட்சியின் தலைமையகம் அம்பேத்கர் திடலில் நண்பகல் 12.00 மணியிலிருந்து 4.00 மணி வரையில் வைக்கப்படும். அங்கே அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்படும்.  அதன் பின்னர், பட்டுக்கோட்டை அருகேயுள்ள அவரது சொந்த ஊரான உஞ்சை விடுதிக்குக் கொண்டு செல்லப்படும்.



நாளை (அக்டோபர் 25 ) மாலை அங்கே அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தி அவ்வூரிலேயே நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.

கட்சியின் கொடிகள் ஒரு வார காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென அறிவிக்கப்படுகிறது. "என்று குறிப்பிட்டுள்ளார்.