தன்னுயிரை துச்சமெனக் கருதிப் போராடிய மாவீரர் கட்டப்பொம்மன் - அண்ணாமலை புகழாரம்

 
annamalai

ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல், தன்னுயிரை துச்சமெனக் கருதிப் போராடிய மாவீரர் வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்று அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது என்றால் அதற்கு காரணம் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து அரும்பாடுபட்டதுதான்.   அவ்வாறு அரும்பாடுபட்டவர்களில் முதன்மையானவராகவும், முன்னோடியாகவும் விளங்கியவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.  ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தூக்கு மேடை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

tn

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல், தன்னுயிரை துச்சமெனக் கருதிப் போராடிய மாவீரர் வீரபாண்டிய கட்டப்பொம்மன் நினைவு தினம் இன்று.


கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை ஏற்க மறுத்து, ஆங்கிலேயர்களுக்கு வரி கட்ட மறுத்துப் போராடி, இறுதியில் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு தூக்குமேடை கண்டவர். வீரபாண்டிய கட்டப்பொம்மன் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வணங்குகிறோம் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.