எதிரிப் படைகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்ந்த வீரபாண்டியகட்டபொம்மன் - ஈபிஎஸ்

 
ep

வீரபாண்டியகட்டபொம்மன் அவர்களின் நினைவு நாளில் அவரின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

tn

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது என்றால் அதற்கு காரணம் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து அரும்பாடுபட்டதுதான்.   அவ்வாறு அரும்பாடுபட்டவர்களில் முதன்மையானவராகவும், முன்னோடியாகவும் விளங்கியவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.  ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தூக்கு மேடை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.



இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், "ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் துணிவுடன் எதிர்த்து, ஆங்கிலேய அரசின் வரி வசூலுக்கு எதிராக மாபெரும் குரலாக ஒலித்து,  எதிரிப் படைகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்ந்து, நம் நாடு விடுதலை அடைய வேண்டி இறுதிவரை போராடி, தன் உயிர்மூச்சு உள்ளவரை தாய் மண்ணை நேசித்து, தூக்குக் கயிற்றை பயமின்றி பரிசாக ஏற்றுக்கொண்ட வீரம் நிறைந்தவரான மாமன்னர் #வீரபாண்டியகட்டபொம்மன் அவர்களின் நினைவு நாளில் அவரின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.