வேலூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

 
vellore

வேலூர் மாநகரில் கிரீன் சர்க்கிள் பகுதியில் நாளை முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Traffic diversion in Vellore Green Circle area | வேலூர் கிரீன் சர்க்கிள்  பகுதியில் போக்குவரத்து மாற்றம்


வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகைபில், 30.11.2024-ம் தேதி சனிக்கிழமை முதல், வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சோதனை அடிப்படையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 

I) சத்துவாச்சாரி மற்றும் காட்பாடி மார்க்கமிருந்து, கிரீன் சர்க்கிள் வழியாக பெங்களூர் செல்லும் வாகனங்கள், நேராக செல்ல தடை விதிக்கப்படுகிறது. 

மாற்றாக, பெங்களூர் மார்க்கம் செல்லும் வாகனங்கள், கிரீன் சரக்கிளிலிருந்து நேஷனல் சர்க்கின் சென்று, வலது புறம் திரும்பி. கலைமகள் பெட்ரோல் பங்க் சாலை வழியாக NH சர்விஸ் சாலையை அடைந்து. தங்களின் பயணத்தை தொடரலாம்.

2) சித்தூர் மார்க்கம் மற்றும் புதிய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள், கிரீன் சர்க்கிளிலிருந்து நேஷனல் சர்க்கிள் சென்று, பூ-டர்ன் எடுத்து மீண்டும் கிரீன் சர்க்கிள் வந்து, தங்களின் பயணத்தை தொடரலாம்.

கிரீன் சர்க்கிளிலிருந்து சென்னை, சத்துவாச்சாரி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் நகரம் செல்லும் வாகனங்கள், நேராக செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாற்றாக,

கிரீன் சர்க்கிளிலிருந்து செல்லியம்மன் கோயில் சென்று, பூ-டர்ன் எடுத்து மீண்டும் கிரீன் சர்க்கில் வந்து, தங்களின் பயணத்தை தொடரலாம்.

30.11.2024-ம் தேதி சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் போக்குவரத்து மாற்றத்திற்கு, பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு, மாவட்ட காவல்துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.